ஆலமரத்தின் மேல் ஏறி தவறான முடிவெடுக்க முயன்ற முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொழும்பு புறக்கோட்டடையில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இன்று(27) நடந்துள்ளது.
ஆலமரத்தில் ஏறிய முன்னாள் இராணுவ வீரர், நகர சபை ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
வாழ்க்கையில் வெறுப்பு
இதன்போது, சுற்றியிருந்த பொதுமக்கள் ஆலமரத்தில் ஏறியமைக்கான காரணத்தை அவரிடம் கேட்டனர்.

அதன்போது, தனக்கு இராணுவத்தில் வேலை இல்லை எனவும் வாழ்க்கையில் வெறுப்படைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவை காண இங்கே அழுத்தவும்..

