அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்
பூஸா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவர்
பூஸா சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சிரிதத் தம்மிக்க(61) என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இன்று மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.அவர் தனது வீட்டு முற்றத்தில் இருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பிலும் அதனை சூழவுள்ள பகுயிலும் அண்மைக்காலமாக துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.