தனது சாரதியின் பெயரில் கொழும்பில் காணி வாங்கிய முன்னாள் அமைச்சர் ஒருவர் தொடர்பான தகவலை அம்பலப்படுத்தியுள்ளார் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி(sunil handunnetti).
நாடாளுமன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில்,
ஜே.வி.பி தலைமையலுவலகத்திற்கு அருகிலுள்ள காணி
பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்தை அண்மித்துள்ள நிலம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமானது. அவர் அதை தனது சாரதியின் பெயரில் வாங்கியுள்ளார்.

சாரதி – அமைச்சரின் மனைவியுடன் சண்டை
“ஒருமுறை இந்த சாரதி அமைச்சரின் மனைவியுடன் காணி அருகே சண்டையிடுவதை நாங்கள் பார்த்தோம். சாரதி அந்த காணியை ஒப்படைக்க மறுத்ததால் சண்டை வெடித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

“முன்னாள் அமைச்சர்களின் சாரதிகள், தோழிகள் மற்றும் உறவினர்கள் பெரும்பாலும் தங்கள் சொத்துக்களை தங்கள் நெருங்கியவர்களுக்கு மாற்றுவதால், அவர்களை விசாரிக்குமாறு முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஒருமுறை எனக்கு அறிவுறுத்தினார்,” என்று ஹந்துனெத்தி மேலும் தெரிவித்தார்.

