முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைதான மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

புதிய இணைப்பு

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை உள்ளிட்ட மூவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் இன்று (06) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களனிப் பகுதியில் ஒரு காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா நேற்றிரவு (05) கைது செய்யப்பட்டார்.

இரண்டாம் இணைப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று (06.03.2025) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

கைதான மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Former Minister Mervyn Silva And Six Arrested

கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணியொன்றைத் தனியார் நபர்களுக்குப் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் விவகார அமைச்சராக அவர் செயற்பட்ட காலப்பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

களனியில் காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

குறித்த விடயத்தை இன்று (06.03.2025) குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (Criminal Investigation Department) தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா (Marvin Silva
) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (05) இரவு பத்தரமுல்லை பெலவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் மோசடி

களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Former Minister Mervyn Silva And Six Arrested

இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.  

இந்நிலையில், போலி ஆவணங்களைத் தயாரித்து 75 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (Criminal Investigation Department) தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.