கடந்த ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதிகள் ஐ.டி.என் என்ற தேசிய தொலைக்காட்சி
வலையமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா ரூபாவாஹினி தொலைக்காட்சி சேவைகளை
அழித்துள்ளனர் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடாளுமன்றில் இன்று (6) உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதிகள் எவரும், தங்கள் தேர்தல் பிரசாரங்களுக்கு,
ரூபாவாஹினிக்கு பணம் செலுத்தவில்லை என்று அவர் கூறினார்.
சொந்த நிதி
இந்த சேவைகள், கடந்த ஆண்டுகளில் நாட்டை ஆண்ட அரசாங்கங்களுக்கு மட்டுமே வேலை
செய்தன.
இதன்படி, ரூபவாஹினி 2021 இல் 122 மில்லியன், 2022 இல் 144 மில்லியன் மற்றும்
2023 இல் 154 மில்லியன் மதிப்புள்ள பணிகளைச் செய்துள்ளது என்று நாடாளுமன்ற
உறுப்பினர் கூறினார்.
இந்தநிலையில், பொது நிதியைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்களை நடத்துவது இனி
சாத்தியமில்லை.
எனவே இந்த சேவைகள், தங்கள் சொந்த நிதியை உருவாக்க வேண்டும்,” என்று அவர்
கூறினார்.