அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் (Jimmy Carter) தனது 100 ஆவது வயதில் காலமானார்.
கார்டரின் இறப்பை அவரது அறக்கட்டளையான கார்டர் சென்டர் உறுதிப்படுத்தியுள்ளது. ”ஜார்ஜியாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க கார்டர் அமைதியாகக் காலமானார்” என கார்டர் சென்டர் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாஷிங்டன் டிசியில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு
அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் பதவி வகித்தார்.
100 வயதான அவர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றார்.
தனது மனிதாபிமான செயல்களால் 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசையும் ஜிம்மி கார்ட்டர் பெற்றிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக அவரது பதவி காலம் முடிந்த பிறகு நோபல் பரிசை பெற்றார்.
உலகத் தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் உடல்நலக் குறைவால் காலமானதாக வெளியாகியுள்ள செய்தியை தொடர்ந்து பல உலகத் தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
100 வயதில் காலமான முன்னாள் ஜனாதிபதி ஜி ஜிம்மி கார்டரை “கொள்கை, நம்பிக்கை மற்றும் பணிவு கொண்டவர்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜி ஜோ பைடன் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ஜிம்மி கார்டருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.