மாத்தறை – வீரகெட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தங்காலை குற்றப்பிரிவு
பொறுப்பதிகாரி, கம்புருபிட்டிய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும்
கொழும்பு – கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் உள்ளிட்ட
நான்கு அதிகாரிகள், பதில் பொலிஸ் அதிபரால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை (Matara) மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை
சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்தே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.
தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணை
தில்சான் மதுசங்க என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 நாட்கள்
தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்
தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாத்தறை மேல்நீதிமன்றம் குறித்த நான்கு அதிகாரிகளையும், அண்மையில் தலா 25,000
ரூபாய் ரொக்கப் பிணையில் செல்ல அனுமதித்திருந்தது.