அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச இணைய இணைப்புகளை வழங்குவதாகக் தெரிவித்து தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ் செய்திகளை அணுகுவதன் மூலம் ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குறுஞ்செய்திகளை அணுகுவதால் சமூக ஊடக கணக்குகள் மற்றும் தொலைபேசி தரவுகளை மற்ற தரப்பினருக்கு அனுப்ப முடியும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் (TRC) மேனகா பத்திரன (Menaka Pathirana) தெரிவித்துள்ளார்.
எனவே குறுஞ்செய்திகள், வட்ஸ்அப், மெசேஞ்சர் மற்றும் தொலைபேசிக்கு ஒரு சாதாரண குறுஞ்செய்தி மூலம் இலவச இணைய வசதியை (Free Data) பெற முடியும் என்ற செய்தி இந்நாட்களில் அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
முறைப்பாடுகள்
மேலும், இவ்வாறான இணைப்புகளில் இணைந்து தமது தரவுகளை வேறு தரப்பினர் பெற்றுக் கொள்வதாக வழமையான முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
எனவே அவ்வாறான இணைப்புகளைத் தவிர்க்குமாறு அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.