கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை
பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊவாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது நிகழ்வொன்றின் போதே அதிபர் ரணில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது 2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எரிபொருளினால் பாரிய இலாபமீட்டும் சிறிலங்கா அரசு
நாட்டின் முன்னேற்றம்
இது தொடர்பில் அதிபர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் கவனம்
செலுத்தியுள்ளோம்,
இதன் அடிப்படையிலேயே அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான
தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், அரசியல் ரீதியாக பிளவுபடக்கூடாது, பிரிந்தால் நாட்டில்
முன்னேற்றத்தை காண முடியாது, கட்சி அரசியலை மறந்து முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தலைமை யாராக இருந்தாலும் தலைவர் நிலைபாட்டில் காய் நகர்த்தும் சுமந்திரன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |