முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். செல்வச்சந்நிதியில் 108 ஜோடிகளுக்கு ஓரே நேரத்தில் திருமணம்

அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் (Jaffna) தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வறுமையில் உள்ள திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதிகள் இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கே இன்று (28) இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரம் கருத்து வெளியிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின், நிதியுதவியில் 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது.

தாலி, கூறைச் சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு, 108 தம்பதிகளுக்கும் செல்வச்சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருமணம் இடம்பெறவுள்ள 108 தம்பதியினரையும், யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம்.

அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி, அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறும்“அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த 108 ஜோடிகளுக்கும் இன்று இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/GrdluEdwb8o

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்