2025 ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சூப்பர் டீசலின் சில்லறை விலையை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மற்றைய எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என பெட்ரொலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.