மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது என மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார்.
அத்தோடு, தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக
தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட செயலகத்தில் நேற்று (1) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள்
அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் நாளாந்தம் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் லீற்றர் எரிபொருள் தேவை
இருந்தபோதும் கையிருப்பில் இருந்து இதுவரை 2 இலட்சத்து 50 ஆயிரம் லீற்றர்
விநியோகித்துள்ளனர்.
அதேவேளை 18 ஆயிரம் லீற்றர் விநியோகிக்க தயாராக
இருக்கின்றனர். 6500 லீற்றர் கொள்வனவு கொண்ட 35 பவுசர்கள் இருக்கின்றன அவைகள்
கொள்வனவுக்கு அனுப்பபட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளாந்தம் 3 ஆயிரம் லீற்றர்
மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இன்று 6 ஆயிரம் லீற்றர்
முடிவடைந்துள்ளது.
எனவே இது தேவையில்லாது கொள்வனவு செய்து பதுக்கி
வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அனர்த்த நிலை கட்டுக் கடங்காத நிலையில் இருக்கும் போது செய்வது போல ஒரு
சுமூகமான நிலையில் இவ்வாறு செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை ஏற்படுத்த தேவையில்லை.
அத்தியாவசிய சேவை
அதேவேளை டீசல் கொள்வனவு செய்ய என அனுப்பிய பவுசர்கள் டீசலை கொள்வனவு செய்யாது
பெற்றோலை கொள்வனவு செய்து வருமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
இவ்வாறு கொள்வனவு செய்த பெற்றோலுடன் பவுசர்கள் நாளை மட்டக்களப்பை வந்தடையும்
அப்போது நாளைக்கு பெற்றோல் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்படும்.

எனவே
தேவையில்லாமல் பதட்டப்பட வேண்டாம் அவ்வாறு பதட்டப்பட்டு பெற்றோலை கொள்வனவு
செய்து பதுக்கும் போது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு
பெற்றோல் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே செயற்கை தட்டுப்பாட்டை பொதுமக்கள்
ஏற்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

