வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் அதிகளவிலான டபள் கெப் வாகனங்கள் இறக்குமதிக்கான கொள்வனவுக் கட்டளைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனைய வாகனங்களுடன் ஒப்பிடுகையில் டபள் கெப் வாகனங்களின் விலைகள் கூடுதலாக அதிகரிக்காமை அதற்கான முதற்காரணமாகும்.
வாகனங்களின் விலை
மேலும், மறுபுறத்தில் சிறுகார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.
அதன் காரணமாக டபள் கெப் மற்றும் வேன்களை இறக்குமதி செய்வதில் பொதுமக்கள் கூடுதல் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.