உலகம் விஞ்ஞான அறிவியலை அடிப்படையாக கொண்டு நகரும் வேளையில் மக்கள் பாபா வங்காவின் (Baba Vanga) வாக்கிற்கு முக்கியம் கொடுக்கின்றனர்.
பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்கவின் கணிப்புகள், உலகெங்கிலும் உள்ள மக்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.
பார்வையற்ற நிலையிலும் எதிர்காலத்தை துல்லியமாகச் சொல்வதாக நம்பப்படும் இவரது கணிப்புகள், இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, 2025 ஆம் ஆண்டிற்கான இவரின் கணிப்புகள் பலரையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன.
உலகளாவிய நிதி நெருக்கடி
பாபா வாங்கா 2025-ஆம் ஆண்டில் ஒரு பெரிய உலகளாவிய நிதி நெருக்கடியை முன்னறிவித்துள்ளார்.
இது பல நாடுகளை மந்தநிலைக்குத் தள்ளும். பணவீக்கம், எரிசக்தி நெருக்கடிகள் மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்கள் பல நாடுகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
மியான்மர் நிலநடுக்கம்
சமீபத்தில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் அவர் முன்னறிவித்தார். சமீபத்தில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
ஆயிரக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமானது. இந்த நிகழ்வு பாபா வாங்காவின் கணிப்பை நினைவூட்டுகிறது.
2025-ஆம் ஆண்டில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவில் பெரிய போர்
பாபா வாங்கா 2025-ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
இந்த யுத்தம் ஐரோப்பா கண்டத்திற்கு மீள முடியாத அளவிலான சேதத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உலக மக்கள் தொகையில் கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது என பாபா வாங்க கணித்துள்ளார்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை இதற்குச் சான்றாகும் என கூறப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் இன்னும் நடக்கிறது.