தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்து உண்மையாகவிருந்தால் அது பாரிய ஒரு குற்றமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் ஜனாதிபதி அநுரவினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டு சரி என்றால் கடந்த கால அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றது என்று தான் அர்த்தம் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,