நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் கம்பஹா நகரம் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக, கம்பஹா நகரத்திலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்கைளை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவசர நிலைகளின் போது இடர் நிலைகளை தெரியப்படுத்துமாறும் அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

