கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி வாக்குமூலத்தைப் பெற்றதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பு காவல்
இதேவேளை, இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேகநபர்களும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் ஒரு பெண் உட்பட மற்றுமொரு சந்தேகநபர் அண்மையில் மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்படனர்.