முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். நகைக்கடையில் பல இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்த கும்பல் கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள நகைக் கடையில் நூதனமான முறையில் பணத்தை அபகரித்த
சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஜந்து இலட்சம் ரூபா பணத்துடன்
கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின்
வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்றவிசாரணை காவல்துறை பொறுப்பதிகாரி கலும் பண்டாரா
தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த செயலுக்கு
உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் (Kandy) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல இலட்சம் பணம் பறிப்பு 

மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடி யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ். நகைக்கடையில் பல இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்த கும்பல் கைது | Gang Arrested For Robbing Jaffna Jewellery Shop

அண்மையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற
குழுவொன்று காவல்துறை புலனாய்வு பிரிவு (சிஐடி) என தெரிவித்து 30 இலட்சம் ரூபா பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பு
கமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தல்

இதனடிப்படையில் சுன்னாகம் பகுதியில் நேற்றையதினம் (17) கைதான பிரதான சந்தேக நபரை
இன்று (18) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

யாழ். நகைக்கடையில் பல இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்த கும்பல் கைது | Gang Arrested For Robbing Jaffna Jewellery Shop

இதேவேளை கண்டியில் இன்று கைதான மூவரையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து
விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் – பிரதீபன் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்