ஹட்டன் நகரில் சகல இடங்களிலும் குப்பைகள் நிறைவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு சகல இடங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்
கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாக இந்த பிரச்சினையை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும்
தீர்ப்பதற்கு தவறியுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்களின் நலனில் அக்கறை இல்லை
அத்துடன், ஹட்டன் நகரம் நுவரெலியா மாவட்டத்தில் முக்கிய நகரமாக காணப்பட்ட போதிலும் இது
வரை கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு சகல தரப்பினரும் தவறியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஹட்டன் டிக்கோயா நகர சபை வரி அறவிடுவதிலும் வருமானத்தினை பெருக்குவதிலும்
காட்டுகின்ற அக்கறை பொது மக்களின் நலனில் இல்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.