ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின்
பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம்(27) அந்த நினைவுத்தூபியானது
இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த நினைவுத்தூபி உருவாக்க குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும், பிரபல
திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமாகிய வ.கௌதமன், குறித்த
சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
நினைவுத்தூபி
அவர் மேலும்
தெரிவிக்கையில்,
குறித்த நினைவுத்தூபி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் முக்கிய
முன்னெடுப்புகள் இடம்பெற்றது. அந்த குழுவில் நானும் ஒரு முக்கியமான
உறுப்பினராக இருந்துள்ளேன்.

இவ்வாறு நினைவுத்தூபி உடைக்கப்பட்டு விட்டது என்ற
செய்தி அறிந்து மிகவும் மனமுடைந்து போனேன்.
இவ்வாறான செயற்பாடுகளை
மேற்கொண்டவர்களை கனடா அரசாங்கம் தண்டிக்க வேண்டும்.
எங்களுடைய உறவுகளை அழிக்கலாம், எங்களுடைய நினைவுச் சின்னங்களை தகர்க்கலாம்
ஆனால் எங்களுடைய நினைவுகளை ஒருபோதும் அழிக்க முடியாது.
ஆயிரமாயிரம் நினைவுச் சின்னங்கள்
இன்னும் இன்னும்
ஆயிரமாயிரம் நினைவுச் சின்னங்கள் உலகம் முழுதும் எழுந்துகொண்டே இருக்கும்.

இதனை எவனாலும், எமனாலும்கூட தடுக்க முடியாது.
எங்களுடைய மக்களையும் அழித்துவிட்டு அவர்களை நினைவுகூருகின்ற நினைவுத்
தூபிகளையும் சேதப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
நினைவு
சின்னங்களையே அழிக்க வேண்டும் என நினைக்கும் இலங்கை அரசானது தமிழ் மக்களின்
இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என நாங்கள் எவ்விதம் நம்புவது? எனவே
இவ்வாறான விடயங்கள் குறித்து சர்வதேசம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்துவதற்கு அனைவரும் ஓர்
அணியில் திரள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

