தளபதி 69
நடிகர் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 69. இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து கடந்த 1ஆம் தேதியில் இருந்து அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூரவமாக வெளியிட்டு வருகிறார்கள். முதலில் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல் குறித்து அறிவிப்பு வெளிவந்தது.

இதை தொடர்ந்து நேற்று நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ இருவரும் தளபதி 69ல் இணைந்துள்ளனர் என அறிவிப்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

கவுதம் மேனன்
மூன்று நட்சத்திரங்களின் அறிவிப்பு இதுவரை வெளிவந்துள்ள நிலையில், தற்போது நான்காவதாக தளபதி 69ல் இணைந்துள்ள நட்சத்திரம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 69ல் இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் இணைந்துள்ளார்.
லியோ படத்தின் வெற்றி கூட்டணியை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக தளபதி விஜய்யுடன் கவுதம் மேனன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://cineulagam.com/article/gautham-menon-in-thalapathy-69-cast-1727939410

