நீக்கப்படும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.