யாழ். வடமராட்சி கிழக்கின் முன்னணி பாடசாலையான உடுத்துறை மகா வித்தியாலயம்
இம்முறை வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மருதங்கேணி
கோட்டத்தில் அதி சிறந்த பெருபேறுகளை பெற்றுள்ளது.
22 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியினை பெற்றதோடு இந்த ஆண்டு கடந்த
வருடத்துடன் ஒப்பிடுகையில் அதி சிறந்த பெறுபேறுகளாக காணப்படுகின்றது.
ஆசிரியர் பற்றாக்குறை
கலைத்துறையில் மாணவன் ஒருவன் 3A சித்தியினை பெற்றதோடு 10 மாணவர்களுக்கு மேல்
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் கடந்த வருடங்களில் கணிதம் மற்றும் உயிரியல் போன்ற
பாடங்களில் தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டு வந்தது.
இதற்கு
தற்போதே ஒரளவு தீர்வு கிடைத்துள்ளதாகவும் மாணவர்கள் பாரிய போராட்டத்தின்
மத்தியில் தமது சொந்த முயற்சியில் குறித்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர் எனவும்
இனிவரும் காலங்களில் நடப்பு ஆண்டின் பெறுபேறுகளை காட்டிலும் அதிகளவான
பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் செல்வார்கள் என பாடசாலையின் அதிபர்
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


