அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள பட்டைதீட்டப்படாத மாணிக்கக் கல் ஏற்றுமதி செயற்பாட்டுக்கு மாணிக்கக் கல் வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் இரத்தினக் கற்களுக்கு வெளிநாடுகளில் பெரும் மதிப்பு நிலவுகின்றது. அதன் ஏற்றுமதி ஊடாக இலங்கை குறிப்பிடத்தக்க அந்நிய செலாவணியை ஈட்டி வருகின்றது.
இந்நிலையில், பட்டைத் தீட்டப்படாத இரத்தினக் கற்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் அதிகார சபை அண்மைக்காலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
கடும் எதிர்ப்பு
இது குறித்து இலங்கையின் பிரதான இரத்தினக் கல் வர்த்தர் சங்கங்கள் தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
அவ்வாறு பெறுமதி சேர்க்காத, பட்டை தீட்டப்படாத இரத்தினக் கல் ஏற்றுமதி மூலம் இரத்தினக்கல் வர்த்தகத்துறை கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.