முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் பாடசாலைவேளை நிகழ்ந்த அனர்த்தம் : துடிதுடித்து பலியான மாணவி

முல்லைத்தீவில்(mullaitivu) இன்றுகாலை பாடசாலைவேளை நடந்த விபத்தில் மாணவி ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் -03இல் கல்வி கற்கும் மாதீஸ்வரன் நர்மதா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பாடசாலைவேளை நிகழ்ந்த அனரத்தம்

முல்லைத்தீவு கொக்கிளாய் காவல் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணி பகுதியில்,பாடசாலைக்கு மாணவர்கள் செல்கின்ற காலை வேளையில் இந்தச் சம்பவம் பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் பாடசாலைவேளை நிகழ்ந்த அனர்த்தம் : துடிதுடித்து பலியான மாணவி | Girl Dies In Mullaitivu Accident

 வீதியில் மிக வேகமாக வந்த மீன் ஏற்றும் வாகனம் சிறுமி மீது மோதியதியதுடன், சிறுமி 20தொடகம் 30 அடி வரையான தூரத்திற்கு வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்ட பிற்பாடு வாகனம் நிறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

 இந்தப் பகுதியில் வீதிப் போக்குவரத்து காவல்துறையினர் எவரும் குறித்த நேரத்தில் கடமையில் ஈடுபட்டு இருக்கவில்லை.

 மீன் ஏற்றிச் செல்கிற வாகனங்கள்

கொக்கிளாய் மற்றும், கருநாட்டுக்கேணி பகுதியிலிருந்து மீன் ஏற்றிச் செல்கிற வாகனங்கள் எப்போதும் வேகக் கட்டுப்பாடின்றி செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவில் பாடசாலைவேளை நிகழ்ந்த அனர்த்தம் : துடிதுடித்து பலியான மாணவி | Girl Dies In Mullaitivu Accident

 கொக்கிளாய் காவல்துறையினர் இது தொடர்பான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்வதில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவும் இவ்வாறு மீன் ஏற்றிச் செல்கிற தென்னிலங்கைப் பகுதியைச் சேர்ந்த வாகனமொன்று கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு அண்மையில் மாணவன் ஒருவன் மீது மோதியதில் குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்