முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

 நாடு முழுவதிலும் இன்றைய தினம் காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகள் இடையில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போது ஏற்பட்ட இணக்கப்பாடுகளின் காரணமாக வேலைநிறுத்தம் நிறுத்தப்பட்டுள்ளது.

அரச மருத:துவ அதிகாரிகள் சங்கம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரச மருத்துவர்களின் இடமாற்றங்களை உரிய நடைமுறைகளுக்கு புறம்பாக ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்த முயன்றதை நிறுத்த இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து வெளியான அறிவிப்பு | Gmoa Temporarily Calls Off Island Wide Strike

நிர்ணயிக்கப்பட்ட காலஅளவில் உரிய நடைமுறைகளின்படி இடமாற்றங்களை மேற்கொள்ள இணங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்த இணக்கப்பாடுகள் இன்றைய தினம் எழுத்து மூலம் உறுதிப்படுத்தப்பட உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று மதியம் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

அத்துடன், எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் நடைமுறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் எந்த நேரத்திலும் வேலைநிறுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கான இடமாற்றங்கள் தொடர்பில் முரண்பாட்டு நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்