இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகின்றது.
அக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 81,000 ரூபாவினால் குறைந்துள்ளது.

இன்றைய நிலவரம்
அதன்படி, இன்று (29) 8 கிராம் 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 296,000 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதற்கமைய, 8 கிராம் 24 கரட் தங்கத்தின் விலை ரூ. 320,000 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

