நாட்டில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் (14.10.2025) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15.10.2025) 5,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (15.10.2025) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 342,300 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 337,600 ரூபாயாக காணப்பட்டது.
இன்றைய நிலவரம்
இதேவேளை, நேற்று (14.10.2025) 365,000 ரூபாயாக இருந்த 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று (15.10.2025) 370,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.