முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2026 இல் அதிரடி மாற்றம் காணப்போகும் தங்க விலை…!

2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய பொருளாதார இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்கள், எப்போதும் மாறிவரும் புவிசார் அரசியல் நிலப்பரப்பு, நிறுவன செயல்பாடு மற்றும் முக்கிய மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கை முடிவுகள் அனைத்தும் ஆண்டு முழுவதும் தங்கத்தின் விலை நிர்ணயத்தில் பங்கு வகிக்கக்கூடும்.

இந்தநிலையில் நிதி ஆலோசனை சேவை நிறுவனமான PL Capital வெளியிட்ட அறிக்கையில், தங்கத்தின் நிலை மிதமானது முதல் வலுவான விலையேற்றத்துடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

முதலீட்டு சொத்து

இதனடிப்படையில் 2025 இல் உலகின் மிகச் சிறந்த முதலீட்டு சொத்துகளில் ஒன்றாக திகழ்ந்த தங்கம் 2026 இல் மேலும் வலுவான வளர்ச்சியை காணும் என எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2025 இல் தங்கம் 65 சதவீதம் உயர்வு எட்டிய அதேசமயம் வெள்ளி 132 சதவீதம் உயர்வு பெற்று முன்னிலை பெற்ற நிலையில் வெள்ளி விலை அதிகரித்ததால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் மீண்டும் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2026 இல் அதிரடி மாற்றம் காணப்போகும் தங்க விலை...! | Gold Price Prediction 2026

கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் தங்கத்தின் விலை உயர்ந்தது அத்தோடு Spot gold 0.4 சதவீதம் உயர்ந்து 4,347.07 டொலராக உள்ளது.

இந்நிலையில், PL Capital அறிக்கையின்படி 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் ஏற்படும் வாய்ப்பு பொதுவாக ஒரு பக்கவாட்டுச் செயலாகும் அதனுடன் மிதமான லாபங்களும் இருக்கும்.

2026 ஆம் ஆண்டிற்கு மத்திய வங்கிகள் எந்த வகையான இருப்பு ஒதுக்கீட்டை திட்டமிடுகின்றன என்பதை கணிப்பது கடினமாக இருந்தாலும் தற்போதைய போக்கு சீனாவும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களும் தங்கத்தின் நிகர வாங்குபவர்களாகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் குறிப்பதாக குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.