சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.
உக்ரேன் – ரஷ்யா மோதல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் வரிவிதிப்பு கொள்கை ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஒரு அவுன்ஸ் தூய தங்கம் 3000 அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி 2942 அமெரிக்க டொலர் முதல் 2940 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலை காணப்படுகிறது.
கொழும்பு செட்டியார் தெருவின் நிலவரம்
இதேவேளை கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 216000 ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 233500 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.