முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள தங்க விலை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போர் அச்சத்துக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது இன்று (05) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக பீஜிங், அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2 சதவீதம் உயர்ந்து 2,848.69 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

அதேநேரம், அமெரிக்காவில் தங்க நிலவரம் 0.2 சதவீதம் அதிகரித்து 2,879.70 டொலர்களாக உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் 

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பதட்டத்தைத் தணிக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான (Xi Jinping) பேச்சுவார்த்தை இந்த வாரம் இடம்பெறாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள தங்க விலை | Gold Prices Have Risen An Unprecedented Level

இவ்வாறான பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தால் தங்கத்தின் விலையானது 3,000 அமெரிக்க டொலர்களாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.5 வீதமாக உயர்ந்து 32.26 அமெரிக்க டொலராகவும், பிளாட்டினம் 0.8 வீதமாக  அதிகரித்து 970.95 அமெரிக்க டொலராகவும் உள்ளது.

இலங்கையில் தங்கத்தின் நிலவரம்

இந்த வில‍ை உயர்வுக்கு அமைவாக இலங்கையிலும் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் உச்சத்தை அடைந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 854,392 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 30,140 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள தங்க விலை | Gold Prices Have Risen An Unprecedented Level

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 241,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 27,630 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் ( 22 karat gold 8 grams) விலையானது 221,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று (21 karat gold 8 grams) 211,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.        

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.