இலங்கையில் தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.
அதன்படி, வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், 0.12 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேங்காய் விலை
தேங்காய் விலை அதிகரித்த நிலையில் உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 175 முதல் 185 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 160 ரூபாயாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த விலை காரணமாகவே தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
https://www.youtube.com/embed/don7JaGAAGI

