விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்னவினால் (Madhura Senevirathna) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நான்கு பீடங்களில் மாத்திரமே வாய்ப்புகள், வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


