விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக்
கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
தெரியவந்துள்ளது.
இதன்படி, குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றையதினம் (03)
வெளியிட்டுள்ளது.
விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம்
மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதேவேளை,
அண்மையில் சிறிய நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை ஏக்கருக்கு 15,000
ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்துவதற்கு இலங்கை
(Sri
Lanka) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் கடந்த மாத தொடக்கத்தில் சிறு
நெல் விவசாயிகளுக்கு நடப்பு பயிர்ச்செய்கைப் பருவத்துக்காக இரண்டு ஏக்கர்
வரையிலான ஏக்கருக்கு 15,000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்தமையும்
குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..