புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு தொடருந்து சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு தொடருந்துசேவையை எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் செயல்படுத்த திணைக்களம் முடிவு செய்துள்ளது.
சிறப்பு தொடருந்து அட்டவணையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம், சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்குத் திரும்ப முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து சேவை
இதன்படி, காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கும், பெலியத்தையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் இரண்டு சிறப்பு தொடருந்து சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளையிலிருந்து கொழும்புக்கு இரண்டு தொடருந்து சேவைகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

