சட்டவிரோதமாக பெறப்பட்ட மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று தம்புள்ளையில் பதிவாகியுள்ளது
தம்புள்ளை அருகே கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பெல்பெந்தியாவ பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நேற்று (22.12.2024) இடம்பெற்றுள்ளது.
காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலி ஒன்றில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்ள்ளார்.
பொலிஸார் தகவல்
கல்பாய, தேவஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் பொதுமருத்துவமனைக்கு அனுப்பியுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.