முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நேபாளத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேற்றையதினம் (23) நேபாளத்தின் (Nepal) காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் அவர் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் போது, கோட்டாபய பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
காரணம்
இந்த நிலையில், குறித்த பயணமானது, கோட்டாபயவின் தனிப்பட்ட பயணம் என கருதப்படுவதுடன், இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் படி, சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே நேபாளத்துக்கு அவர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.