கோட்டபய ராஜபக்சவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால்
நாடும் இந்த மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டது என மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பள்ளிமுனை வீதியில் இன்று (31) கட்சியின் தேர்தல் அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த நாட்டை முழுமையாக மீட்டெடுக்கவும்,மன்னார் மாவட்ட மக்களின் பல்வேறு
பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் மக்கள் தகுதியான ஒருவரை
ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித்
பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.
மன்னார் மாவட்ட மக்கள் ஒன்று பட்டு
அவரை வெற்றி பெறச் செய்ய இருக்கிறார்கள். கத்தோலிக்க மக்கள் அதிகமாக இருக்கின்ற
இந்த மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் இந்து மக்களும் சேர்ந்து வாழ்ந்து
வருகின்றனர்.
அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்ற இந்த மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவின் வருகையை
எதிர் பார்த்துள்ளனர்.
இந்த மாவட்டத்திலே பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது. குறிப்பாக கடற்றொழில் சமூகம்
பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்” என்றார்.