பட்டலந்தை வதை முகாம் விவகாரம் இலங்கையில் மாத்திரம் அல்ல- சர்வதேச மட்டத்திலும் பூதாகரமாகி வருகின்றது.
இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் நுற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தைத்தான் ‘பட்டலந்தப் படுகொலை’ என்று அழைக்கின்றார்கள்.
அந்த வதைமுகாமுக்கு முன்நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பாக இருந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு.
இதேபோன்றதான ஒரு சம்பவம் மிக அண்மையில் நடந்திருந்தது.
அந்தச் சம்பவத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்டவர்கள் தமிழ் இளைஞர்கள்.
திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த அந்த நிலக் கீழ் சித்திரவதை முகாமின் பெயர் ‘‘கோட்டா காம்ப்’.
இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து, தமிழரசுக் கட்சியின் செயற்படாத தன்மையினால் ஊடகங்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுவிட்ட – மனதை உறையவைக்கும் ‘கோட்டா காம்ப்’ பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
https://www.youtube.com/embed/Tj2W2mmlQX0