மரண விசாரணை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொழில்முறை
இதனடிப்படையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதோடு அவர்களின் தொழில்முறைத் தன்மையையும் சரிபார்ப்பது மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த அறிவிப்புகளும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

