முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறித்த விடயமானது ஜனாதிபதியால் இன்று (13) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட ஏழு வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் மூலம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சு

அதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், கனடாவின் டொராண்டோ, இத்தாலியின் மிலான் மற்றும் டுபாய் தூதரகங்கள் மூலம் இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல் | Government Announcement To Sri Lankans Abroad

இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள முறைமைக்கு ஏற்ப வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் இந்தச் சான்றிதழ்களை வழங்கும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாகப் பராமரிக்கப்பட்டு e- BMD தரவுக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரவுக்கட்டமைப்பு

இதனடிப்படையில், ஆரம்ப கட்டத்தில், e-BMD தரவுக் கட்டமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 45 மில்லியன் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல் | Government Announcement To Sri Lankans Abroad

இந்தச் சான்றிதழ்கள் 01.01.1960 இற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் என்பதோடு தரவுக்கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ் பின்னர் திருத்தப்பட்டால் அத்தகைய சான்றிதழ்கள் தரவு அமைப்பில் புதுப்பிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.