வெளிநாட்டு ஊழியர்களுக்காக முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை இன்று (05.12.2024) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல (Ashoka Ranwala) தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், 2022 மே 1 முதல் 2023 செப்டம்பர் 15 வரை செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தின் மூலம் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி வரி
இதேவேளை, வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இயந்திரத் திறனுக்கு ஏற்ப வரி விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.