முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், நாட்டின் பொதுச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒரு சாதாரண குடிமகனுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டால் எடுக்கப்படும் அதே வழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
சலுகை வெட்டு
இருப்பினும், அத்தகைய அச்சுறுத்தல் இருந்தால், அது குறித்த உண்மைகளை அவர் முதலில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசபந்து தென்னகோனுக்கு பாதாள உலகத்திலிருந்து பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசபந்து தென்னகோன் ஐ.ஜி.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஓய்வூதியம், பாதுகாப்பு மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
நிறுவனங்களின் பொறுப்பு
தேசபந்து தென்னகோனின் சிறப்புரிமைகள் நீக்கப்படுவது தொடர்பாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே அதற்கேற்ப செயல்படுவது அந்த நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.