அரசாங்க மற்றும் தனியார் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் இது தொடர்பில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றிற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு
அதன் பிரகாரம் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வீதியோரங்களில் வாழும் சிறுவர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

அவற்றில் மூன்றாயிரம் ரூபாவை அவர்கள் தங்கி வாழும் பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்கவும் மிகுதி இரண்டாயிரம் ரூபாவை சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி சேமிப்புத் திட்டம் ஒன்றில் வைப்புச் செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்காக தேசிய சேமிப்பு வங்கியின் ஒத்துழைப்பையும் அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

