கடந்த நான்கு ஆண்டுகளாக களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்தில் மோசடி செய்த பெண் உயர் அதிகாரி உட்பட இருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.
விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசாரணை
12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நிதியை மோசடி செய்ததாக, களுத்துறை பிரதேச சபையின் செயலாளர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கு விபரங்களின் பகுப்பாய்வு மூலம், சம்பளக் கணக்குகளில் முறைகேடு செய்து பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

