நாடு முழுவதும் 3,000 க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒரு கிராம உத்தியோகத்தர் பல பிரிவுகளில் பணிகளை மேற்பார்வையிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் கூறுகையில், “இந்த வெற்றிடங்களை நிரப்ப நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.
அமைச்சரவை ஒப்புதல்
கிராம உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளையும் அரசாங்கம் தீர்க்கும்.
அமைச்சரவை அமைச்சர்களின் ஒப்புதலைத் தொடர்ந்து, கிராம அலுவலர் சேவை அரசியலமைப்பு பொது சேவை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தைப் பற்றி கலந்துரையாடவும் தேவையான மாற்றங்களைச் செய்யவும் தொழிற்சங்க பிரதிநிதிகளை விரைவில் சந்திப்போம்” என்றார்.