முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரகசியமாக ஏலம் விடப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள அரச வாகனங்கள்!

வடமத்திய மாகாண சபைக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் இரகசியமாக ஏலம் விடப்பட்டு குறைந்த விலைக்கு விடப்பட்டுள்ளதாக பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

குறித்த ஏலத்தில் 12 அதி சொகுசு வாகனங்கள் மொத்தம் 28 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள் பயன்படுத்திய இருபத்தி இரண்டு வாகனங்கள் சமீபத்திய நாட்களில் இரகசியமாக ஏலம் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொத்தமாக 28 மில்லியன்

இருபத்தி இரண்டு வாகனங்களில் பன்னிரண்டுக்கு வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், இந்த 12 வாகனங்களில், முன்னாள் மாகாண முதலமைச்சர் பயன்படுத்திய BMW ரக சொகுசு வாகனமும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இரகசியமாக ஏலம் விடப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள அரச வாகனங்கள்! | Government Vehicles Auctioned In Secret

குறிப்பாக, BMW வாகனம் 2014 இல் தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிராடோக்களு, ஒரு டிஃபென்டரும், மேலும், மிட்சுபிஷி பெஜிரோ வாகனங்கள் உட்பட 12 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

எலம் விடப்பட்ட 12 வாகனங்களும்  மொத்தமாக 28 மில்லியனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தை மதிப்பு

இது பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றம் ஆனால் தற்போதைய சந்தை நிலவரப்படி இந்த விலைவரம்பானது பாரிய நட்டத்தை எடுத்துகாட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் பிராடோ வாகனமானது ஐந்து மில்லியனுக்கும் குறைவான விலையில் விற்கப்பட்டதாக அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இரகசியமாக ஏலம் விடப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள அரச வாகனங்கள்! | Government Vehicles Auctioned In Secret

தற்போதைய பிராடோ வாகனத்தின் சந்தை மதிப்பு இருநூறு மில்லியனுக்கும் அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏலம் விடப்பட்ட BMW வாகனம் ஐந்து மில்லியன் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனத்தை அதாவது நூறு மில்லியனுக்கும் அதிகமாக விற்க முடியும் என அமைப்புக்கள் கூறியுள்ளன.

இந்நிலையில் குறித்த ஏலத்தில் 12 அதி சொகுசு வாகனங்கள் குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டமை ஒரு மோசடி என்று பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.