அரசாங்க ஊழியர்களுக்கு அதிக அடிப்படை சம்பளத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு அனைத்து சம்பளங்களும் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம்
இதேவேளை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

