Courtesy: H A Roshan
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பத்தினிபுர கிராம மக்களுக்கான இந்து மயான காணி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது இன்று (12) மாலை பத்தினிபுர கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
வர்த்தமானி இடப்பட்ட காணி
சுமார் 25 வருடகாலமாக இந்து மயானம் இன்றி வாழ்ந்த மக்களுக்காக தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான வர்த்தமானி இடப்பட்ட காணியே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் உட்பட பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், நீண்டகாலமாக நிலவிய இந்து மயான பிரச்சினைக்கு பத்து நாட்களுக்குள் தீர்வு பெற்று தந்த கிழக்கு மாகாண ஆளுநருக்கு மக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இதன் போது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் கிராம மக்களும் தங்கள் வயல் நில குடியிருப்பு பகுதிகளை இலங்கை துறை முக அதிகார சபையினர் கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் ஆளுநரிடம் மக்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் உரிய சாதகமான நடவடிக்கை எடுப்பதாக மக்களிடத்தில் ஆளுநர் உறுதியளித்தார்.