முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனியார்துறை ஊழியர்களை ஏமாற்றிய அரசாங்கம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தொழிற்சங்கப் பிரமுகர் அண்டன் மார்கஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கம், அனைத்து நிறுவனங்களின் பொது ஊழியர் சங்கம் என்பவற்றின் செயலாளரான அண்டன் மார்கஸ் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் ​போது மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அடிப்படை சம்பளம் 

அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, தற்போதைக்கு தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 21 ஆயிரம் ரூபாவாக உள்ளது.

தனியார்துறை ஊழியர்களை ஏமாற்றிய அரசாங்கம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Govt Cheated Private Sector Employees

அதுவும் 2005ம் ஆண்டு மஹிந்த அரசாங்கம் உயர்த்திய 1000 ரூபா சம்பள அதிகரிப்பும், 2015ல் நல்லாட்சி அரசாங்கத்தில் உயர்த்தப்பட்ட 2 ஆயிரத்து 500 ரூபா அதிகரிப்பும் உள்ளடக்கப்பட்டதன் காரணமாகவே அடிப்படைச் சம்பளம் 21 ஆயிரம் ரூபாவாக உள்ளது.

கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போது தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளமாக 27 ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

வர்த்தமானி 

ஆனால் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டு நீண்ட காலம் கடந்து விட்ட நிலையிலும் அது தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் இதுவரை வௌியிடவில்லை.

தனியார்துறை ஊழியர்களை ஏமாற்றிய அரசாங்கம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Govt Cheated Private Sector Employees

இதற்கிடையே அடுத்த வருடம் தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 30 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கு முன்னதாக இந்த வருடத்தின் வரவு செலவுத்திட்டத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றும் அண்டன் மார்கஸ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்